வியாழன், 18 பிப்ரவரி, 2010

கோடாங்கி கவிதைகள் .

பாடம் கற்று கொள்ள பார பட்சம் பார்பதில்லை நான் .
பகையாளி இடம் கூட.,,,,,,,,,

கடற்கறை இல் கஞ்சனாக இருந்த ஒருவனை
கடலை வாங்கி தின்ன செய்த சுண்டல் சிறுவனின்
தொழில் நுட்பம்.

மளிகை சாமனுக்கு மணிகணக்கில் பட்ஜெட் போடும்
மாதவன் மனைவிக்கு தினமும் மல்லிகை வாங்கி தரும்
மானசீகம்.

பென்ஸ் கார் பல்ராம் சேட் பெல் பாட்டம் போட்டு வந்த
சேல்ஸ் பையனிடம் காட்டிய கடுப்புத்தனம்

நடை பாதை வியாபாரி இடம் நாணம் இல்லாமல் நாணயம்
பொறுக்கும் ஏட்டு 302 வின் நயவஞ்சகம்

கணவனுடன் செல்லும் கர்ப்பிணி பெண்ணை கண்ணால்
கற்பழிக்கும் ஒரு கிழவனின் காம கொடுரம்

பாடல் கொண்டு பகைவனை பதற வைத்த பாரதியின் சிலை
பரமரிக்கபடாத அரசாங்க அலட்சியம் .


கோடங்கி.


பட்டணம் பார்க்க வந்தீகளா


பஞ்சாயத்து திண்ணைல படுத்து கிடந்தீக
பனங்கிழங்கு புடுங்கி அவிச்சி
தின்னிக
பச்சை வயலுக்குள்ள பசின்னு பாக்காம
பாத்தி கட்டி நாத்து நட்டி வெச்சிக

நல்லாதானே இருந்தீக மக்கா
நாசமா ஏன் போனீக .

நான் சொல்லுதேன் .

நாட்சி முத்து வந்து நின்னான்
நல்லாதானே பொய்யும் சொன்னான்

மாரி பட்டணம் நீயம் வாடா
போடலாம்
420 பீடா
இங்க ஏன் இருக்க பட்டி காடா
பஸ் புடிச்சி பட்டணம் வா நீயும்
ஸ்பீடா


இப்படி சொல்லிட்டு போய் புட்டான் சொககவாய் பயபுள்ள
மக்கா உனக்கு பறந்தது பட்டாம்பூச்சி
மனசுக்குள்ள


பட்டணம் பார்க்க வந்தீக நீங்க பஸ்ல ஏறி வந்தீக
நெரிசல் கூட்டம் கண்டு மனசு நொந்து
நின்னீக

பஸ் எறங்கி நின்னு பல மாடி கட்டடம் கண்டு
அண்ணாந்து பாக்கை இல
அடிச்சி புட்டான் உங்க பாக்கட்டுல

அழுது புலம்பி நின்னு
வீங்கி போச்சு கண்ணு
ஆத்தா செஞ்சி போட்ட அஞ்சு பவுனு செயின்
அகர்வால் சேட்டுகிட்ட அழுது அடமானம் வெச்சி
நீங்க ஆட்டோ புடிச்சி அமிஞ்சிகரை வந்தீக


மல்லு வேட்டி மடிச்சி கட்டி
மாமன் பொண்ண மயக்கி புட்டு
குழாய் பேண்டு போட்டு குரங்கு போல
குத்த வெட்சீக


கண்டாங்கி சேலை கட்டும் கருத்தம்மா
அங்க இருக்க
கலர் கவுனு போட்டு வந்த கனகாவ டாவு
அடிச்சிக .

அவுக காபி ஷாப் கூட்டி போனாக
கலர் கலரா ரீல் விட்டாக
கடுக்கன் போட்ட மக்க உங்க வட்ட
வாய் பொழக்க வெட்சாக.

வயல் உளைச்ச காச
வழிச்சி தொடைக்க
வெட்சாக.
காசு காலியானதும் கை கொடுத்து
அனுப்பி
வெட்சாக.

மக்கா கண்ணீர் தொடைக்க கைக்குட்டை
கைல இல்ல .
உங்க பாபநாசம் பஸ் புடிக்க பாக்கெட்ல
துட்டு இல்ல.
பட்டணத்து பாப்பவ பக்குவமா புடிக்க வந்து
பஸ் காசு இல்லாம பஸ்ஸ்டாண்ட்ல படுத்த நொந்து .

ஏல
அப்பன் காசு இருக்கு அசையாத வீடு இருக்கு
ஆடு அடிச்சு சோறு போடஆத்தாவும் அங்க இருக்கு

அப்போப்போ காசு தர அப்பத்தாவும் படுத்து கிடக்கு
மச்சானே கதியீனு கருத்தமாவும் காத்து கிடக்கு .

பட்டணம் போதும் ராசா சொந்த ஊர்ல கோட்ட கட்டு
பாபநாசம் பஸ் வருது உன் பழைய துணிய மூட்டை கட்டு

அப்போ கண்டிப்பா அங்க இருக்கு நாட்சி முத்துக்கு அருவா வெட்டு













திங்கள், 1 பிப்ரவரி, 2010

ஆயிரத்தில் ஒருவன் (இன்று இவன் )


அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது

'என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

சகாயம் ஐ.ஏ.எஸ்.,
நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.

சனி, 30 ஜனவரி, 2010

நான் ரசித்த தமிழ் திரை படங்கள்.


எதிர் நீச்சல் (1968)
சினிமாக்கு அழகு தேவை இல்லை என்று அப்போவே கே.பி. முடீவு பண்ணிடாருனு நினைக்கிறேன் . பென்சில் ல லைன் போட்ட மாதிரி ஒரு உடம்பு ,ஒட்டிப்போன கன்னம் என்று மாடிப்படி மாதுவாக நாகேஷ் .மலையாளிக்கும் மனசு இருக்கு என்று சொல்ல கூடிய கதா பாத்திரமாக முத்துராமன்.பேராசை பெரும் நஷ்டம் என்ற சொல்லுக்கு பொருத்தமாக சௌகார் ஜானகி . ஆம்பளைக்கு வீரம் வேண்டும் என்று நமக்கு உரைக்கிற ஸ்ரீ காந்த்,தோரணைக்கு மேஜர், அழகுக்கு ஜெயந்தி என்று ஆங்காங்கே வசீகர தூவழுடன் ஒரு அனாதையீன் வாழ்க்கையை நகைச்சுவை யாகவும் ,சமுதாயதிற்கு சவுக்கு அடியாகவும் சொல்லி இருக்கும் இந்த திரை படம் ஒரு அமுதமே .

ஆறில் இருந்து அறுபது வரை (1979)

பரட்டை என்றால் ஊரே அலறிய 16 வயதினிலே ரஜினியா என்று திகைக்க கூடிய நடிப்பினால் நம்மை உருக வைத்திருப்பார் சூப்பர் ஸ்டார். பணம் மட்டும் தான் வாழ்கை என்று வாழ்பவர்களுக்கு இந்த படம் ஒரு பாடம் .
S.P. முத்துராமன் இயக்கிய ஒரு முத்தான படைப்பு. அலட்டாத சூப்பர் ஸ்டார் நடிப்பால் நம்மை அதிர வைக்கும் படம். சோகமாக முடிந்தாலும் சிந்திக்க தூண்டும் விஷயங்கள் நிறைய உண்டு என்பதில் ஐயம் இல்லை .

மூன்றாம் பிறை (1982)

பாலு மகேந்திராவின் படைப்புகளில் என்னை பிரமிக்க செய்த ஒரு திரை படம் . பாக்ய லக்ஷ்மியாக ஸ்ரீ தேவி தன்னுடைய நடிப்பால் நம்மை கவர்ந்தாலும் கடைசி 5 நிமிடகள் என் மனதை சிதைத்து விட்டது கமல் தான்.ஒழுக்கமான ஒளிப்பதிவு ,இனிமையான இசை அழுத்தமான முடிவு என்று என்னை கலங்கடித்த ஒரு காவியம் .(சில்க் சுமிதா பத்தி ஒன்னும் சொல்லலையே என்று நீங்கள் கேட்பது எனக்கு புரியுது)


முதல் மரியாதை(1985)

கிராமத்து மண்ணின் அழகை பாரதி ராஜாவை தவிர அருமையாக பதிவு செய்து விட வேறு யாரும் இல்லை என்று சொல்லாம். மண்ணின் வாசனையோடு கதை சொல்லும் அழகு பாரதி ராஜாவிடம் இருந்து தான் தமிழ் திரையுலகம் கற்று கொண்டது என்று சொன்னாலும் தவறு இல்லை. மலை சாமி தேவர்
( சிவாஜி)இறுதி படுக்கை இல் இருந்து ஆரம்பிக்கும் இந்த திரை படம் இரு காதல் ஜோடிகளின கனிவான காதல் வழியாக பயணம் செய்து மிரட்டலான திரைக்கதை உடன் முடிவு அடைகிறது . பாடல்கள் அனைத்தும் தேனிசை.இளையராஜாவின் இன்னிசை. ராதா, சத்யராஜ், வடிவுக்கரசி என அனைவரின் நிறைவான நடிப்பும் அருமை.


நாயகன்(1987)

மரியோ பூசோ வின் நாவலை தழுவி வந்த காட் பாதர் எனும ஹாலி வூட் திரைபடத்தின் பாதிப்பு இருந்தாலும் கமல் ஹசன் னின் நடிப்பில் புதிய பரிமானம் என்று குறிப்பிடலாம் . மும்பை யில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வை மையமாக கதை சொல்லிருக்கும் மணிரத்தினத்தின் ஒரு இரத்தின கல் இந்த படம். சிறிய வயது கமல் முதல் வயதான கதா பாத்திரம் வரை கமல் எடுத்து கொண்ட சிரத்தை நன்றாக விளங்குகிறது. சரண்யாவின் அறிமுக படம் என்றாலும் அப்படி தோன்றவில்லை நமக்கு. p.c.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும்,
இளையராஜாவின் இசையும் கூடுதல் பலம்.
.

கேளடி கண்மணி (1990)

இந்த படம் எனக்கு ஏன் புடிக்கும்னு தெரியவில்லை.s.p.b இமெல உள்ள காதல் னானு தெரியவில்லை. ராதிகாவோட இயல்பான ntha padam ennakku yen pudichirrukkunu theriyalai.Oru velai SPB mela ulla kathalanum theriyala. Radhikaovoda iyalabaana actinganu theriyala.Anju vin Alagana mugamanu theriyala.Ramesh aravind pannum kurumbaanu theriyala. ilayaraja voda nenjai urukkum isaiyanu theriyala.Vasanth mela ulla respect anu theriyala.eppovathu thukkam thondrinal naan ketkum "mannil intha kadal"songunalya num theriyala. Intha padam naan paarthu
ttu irrukum pothu en thambi yoda alugaiyaal theatrea engala thirumbi paarthatunalayanum theriyala.

THEVER MAGAN(1992)

Adanguriya nee onnum intha padatha patthi sollavendaam enga ellorukkum theriyum nu neenga solrathu ennakku kekkuthu. romba correcta sonnenga.periya thevar(shivaji)oru singam pola thotram.london return shakthi(kamal hasan)siruthai pola silirppu nu padame oru ranagalam thaan. intha padam vanthathhukku piragu saloonla collection kammi nu kelvipatein.Namma paya pullainga mudi vetta varathe illainu ore alugai.antha funk style thaan kaaranam.enna oru style intro athu.nasar a screnla paathaa nammakke vettanum pola irrukkum.vadivelu "solra mathiri enna oru villathanam".intha gramthu manvasanikku en ilayarasavai vitta evaan irrukaan isaikku. inji idupalagi jooperu.vadivellu ku oru vadigaal intha padam.sollitee pogalaanga . gowthami hehe hehe hehe

SIRAI SALAI(1996)

Malayala iyakunar priyadharshan iyakkiya miga piramaandamaana thirai padam.
Mohan lal um prabhuvum paarpatharkku annan thambi pola irrupaargar.
Andhaman jaila adaipatirukkum india makkallin kodumaigalai asal pathivoodan koodiya intha thiraipadam raan rasithavigalil ondru.isai gnani in pinnani isai miratal. Brithish kaaran aathci kaalathil namma aalinga enna ayokithaanam nammkku ethira panni irukkaganu chinna nakkalum undu intha padathil.

innum thodarum.................











தமிழ் சினிமா_- ஒரு பார்வை

எங்க அப்பா மாடர்ன் சினிமாஸ் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம்பிள்ளை அவர்களிடம் கணக்குப்பிள்ளையாக இருந்த நேரத்தில் என்னையும் ஸ்டுடியோ க்கு கூட்டிட்டு போவார்,அப்போ இருந்தே சினிமா மீது எனக்கு ஒருபிணைப்பு என்று ஆரம்பிக்க ஆசை தான். ஆனா பாருங்க பொய் சொல்லி எனக்குபழக்கம் இல்லை.அதான் ........ .

சினிமா பத்தின என்னுடைய பார்வை கொஞ்சம் வித்யாசமானது தான் ஏன் விவகரமானதுன்னு கூட சொல்லாம்.ஒரு அழகான பொண்ணு காபி ஷாப் கூப்பிடுது போறியா இல்ல ஒரு நல்ல படத்துக்கு டிக்கெட் இர்ருக்கு போறியான்னு யாரவது கேட்டா(அந்த பொண்ணு கூட சினிமா பார்த்து கிட்டே காபி சாபிடுறேன் என்று சொல்ல வில்லை )என்னுடைய விருப்பம் இரண்டாவது கேள்வி தான். ஏன் என்றால் நான் நேசிப்பதில் முதன்மையானது சினிமாவை தான் .(வீட்டுக்காரி பக்கத்துல இல்லாத தைரியம் தான்)
தமிழ் திரைப்படங்களில் ஹரிதாஸ் காலத்தில் இருந்து ஹிமேஷ் ரேஷ்மியா இசை அமைத்த திரைப்படம் வரை பேசலாம்.விரிவாக கூற வேண்டாம் என்று சுருக்கமாக முடிச்சிருவோம்.ஒரு சினிமா என்பது எப்படி இருக்க வேண்டும் என்று என்னுடைய சிறிய கருத்து இது. ஒரு படம் பார்த்துட்டு வந்த பிறகும் அந்த படத்தோட பாதிப்பு நம்ம மனசுல குறைந்தது மூணு நாளவது மனசுல இருந்து இடைஞ்சல் பண்ணனும்.அப்படி என்னை பாதித்த சினிமா மிகவும் குறைவு தான்.ஏன் நல்ல சினிமா வருவதில்லை என்று விசனப்படாத நாள் இல்லை.ஒரு சினிமா இயகினால் என்ன என்று தோன்றியதும் உண்டு.இயக்கத்தில் இறங்குவதற்கான திட்டமும் உண்டு.

M.G.R. காலத்தில் இருந்து எம்ட்டன் மகன் பரத் வரைக்கும் 50 பேர் கதா நாயகனிடம் அடி வாங்குகிற வழக்கம் இன்றும் உள்ளது. கலை தாயின் மகன் என்று மார்தட்டி கொள்ளும் கமல் பழைய திரை படங்களும் இந்த ராகம் தான். இதை மாற்றும் முயற்சியில் இன்று பூத்திருக்கும் என் இளம் இயக்குனர்களுக்கு ஒரு சிகப்பு கம்பளம்.DUEL இது நான் உதாரணம் கூறும் ஒரு தொலைகாட்சி திரை படம் . 1971 இல் வெளி வந்த இந்த திரைப்படம் spielberg என்னும் இயக்குனரால் இயக்க பட்ட ஒரு திரை படம் ஒரு கார் ஒரு லோரி இவை இரண்டும் தான் இந்த திரை படத்தின் கதாநாயகர்கள். மிரட்ட வைக்கும் திரைகதை தான் இந்த படத்தின் சிறப்பு அம்சம். இந்த திரைபடத்தை சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு.ஒரு படத்தை தாங்கி செல்வது திரைகதை தான்,இதை பார்த்தல் புரியும்

நான் பார்த்து வியந்த தமிழ் இயக்குனர்களில் என்னை ஈர்த்தது முதலில் பாலா தான். என்னை கலைஉலகதிர்கு காலடி வைக்க தூண்டியதும் இவர் திரைப்படங்கள் தான் .சேது, நந்தா,பிதா மகன் ,நான் கடவுள் என்று வித்தியாசமான பாணியில் இயக்கும் ஒரு இயக்குனர். இவரை போன்று அமீர் ,சுசெந்திரன், சசிகுமார் போன்றவர்கள் மீதும் மதிப்பு உண்டு.

நல்ல திரை கதை .வசனம் , இசை,இறுதியாக ஒளிபதிவு அனைத்தும் தரமாக இருந்தால் மட்டும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் கிடைக்கும். நடிகர்களை நம்பி மட்டும் படம் எடுபவர்களை பார்த்து பரிதாப பட தான் முடியுமே தவிர பாராட்ட முடியாது . இங்கு DVD என்று ஒன்று இல்லாவிட்டால் பாதி இயக்குனர்கள் இல்லை. ஹாலிவுட் திரைப்படங்களின் தொழில் நுட்பம் இல்லாவிட்டாலும் மனதை தொடும் கதை அம்சம் உள்ள படங்களை இரு கை கூப்பி வரவேற்போம் .

கோடாங்கி.







உலக சினிமாவில் இன்று.




A Prophet (French: Un prophète) is a 2009 French prison film directed by Jacques Audiard. Audiard claims that the film aims at "creating icons, images for people who don't have images in movies, like the Arabs in France,"[2] though he also had stated that the film "has nothing to do with his vision of society," and is a work of fiction.[3]

The film was a nominee for Best Foreign Language Film at the 82nd Academy Awards, in 2010, when the Oscar went to the Argentine crime drama, The Secret in Their Eyes.



Who is ur god?

Most People are outraged upon hearing this question.What do you mean,Who is your god?they ask.My god is the creator of the heavens and the earth. And Most of these People will be shocked to find out that their proclamation that their god is the creator of the heavens and the earth is no more than lip service,and that they are in fact desitinated for hell.