சனி, 30 ஜனவரி, 2010

தமிழ் சினிமா_- ஒரு பார்வை

எங்க அப்பா மாடர்ன் சினிமாஸ் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம்பிள்ளை அவர்களிடம் கணக்குப்பிள்ளையாக இருந்த நேரத்தில் என்னையும் ஸ்டுடியோ க்கு கூட்டிட்டு போவார்,அப்போ இருந்தே சினிமா மீது எனக்கு ஒருபிணைப்பு என்று ஆரம்பிக்க ஆசை தான். ஆனா பாருங்க பொய் சொல்லி எனக்குபழக்கம் இல்லை.அதான் ........ .

சினிமா பத்தின என்னுடைய பார்வை கொஞ்சம் வித்யாசமானது தான் ஏன் விவகரமானதுன்னு கூட சொல்லாம்.ஒரு அழகான பொண்ணு காபி ஷாப் கூப்பிடுது போறியா இல்ல ஒரு நல்ல படத்துக்கு டிக்கெட் இர்ருக்கு போறியான்னு யாரவது கேட்டா(அந்த பொண்ணு கூட சினிமா பார்த்து கிட்டே காபி சாபிடுறேன் என்று சொல்ல வில்லை )என்னுடைய விருப்பம் இரண்டாவது கேள்வி தான். ஏன் என்றால் நான் நேசிப்பதில் முதன்மையானது சினிமாவை தான் .(வீட்டுக்காரி பக்கத்துல இல்லாத தைரியம் தான்)
தமிழ் திரைப்படங்களில் ஹரிதாஸ் காலத்தில் இருந்து ஹிமேஷ் ரேஷ்மியா இசை அமைத்த திரைப்படம் வரை பேசலாம்.விரிவாக கூற வேண்டாம் என்று சுருக்கமாக முடிச்சிருவோம்.ஒரு சினிமா என்பது எப்படி இருக்க வேண்டும் என்று என்னுடைய சிறிய கருத்து இது. ஒரு படம் பார்த்துட்டு வந்த பிறகும் அந்த படத்தோட பாதிப்பு நம்ம மனசுல குறைந்தது மூணு நாளவது மனசுல இருந்து இடைஞ்சல் பண்ணனும்.அப்படி என்னை பாதித்த சினிமா மிகவும் குறைவு தான்.ஏன் நல்ல சினிமா வருவதில்லை என்று விசனப்படாத நாள் இல்லை.ஒரு சினிமா இயகினால் என்ன என்று தோன்றியதும் உண்டு.இயக்கத்தில் இறங்குவதற்கான திட்டமும் உண்டு.

M.G.R. காலத்தில் இருந்து எம்ட்டன் மகன் பரத் வரைக்கும் 50 பேர் கதா நாயகனிடம் அடி வாங்குகிற வழக்கம் இன்றும் உள்ளது. கலை தாயின் மகன் என்று மார்தட்டி கொள்ளும் கமல் பழைய திரை படங்களும் இந்த ராகம் தான். இதை மாற்றும் முயற்சியில் இன்று பூத்திருக்கும் என் இளம் இயக்குனர்களுக்கு ஒரு சிகப்பு கம்பளம்.DUEL இது நான் உதாரணம் கூறும் ஒரு தொலைகாட்சி திரை படம் . 1971 இல் வெளி வந்த இந்த திரைப்படம் spielberg என்னும் இயக்குனரால் இயக்க பட்ட ஒரு திரை படம் ஒரு கார் ஒரு லோரி இவை இரண்டும் தான் இந்த திரை படத்தின் கதாநாயகர்கள். மிரட்ட வைக்கும் திரைகதை தான் இந்த படத்தின் சிறப்பு அம்சம். இந்த திரைபடத்தை சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு.ஒரு படத்தை தாங்கி செல்வது திரைகதை தான்,இதை பார்த்தல் புரியும்

நான் பார்த்து வியந்த தமிழ் இயக்குனர்களில் என்னை ஈர்த்தது முதலில் பாலா தான். என்னை கலைஉலகதிர்கு காலடி வைக்க தூண்டியதும் இவர் திரைப்படங்கள் தான் .சேது, நந்தா,பிதா மகன் ,நான் கடவுள் என்று வித்தியாசமான பாணியில் இயக்கும் ஒரு இயக்குனர். இவரை போன்று அமீர் ,சுசெந்திரன், சசிகுமார் போன்றவர்கள் மீதும் மதிப்பு உண்டு.

நல்ல திரை கதை .வசனம் , இசை,இறுதியாக ஒளிபதிவு அனைத்தும் தரமாக இருந்தால் மட்டும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் கிடைக்கும். நடிகர்களை நம்பி மட்டும் படம் எடுபவர்களை பார்த்து பரிதாப பட தான் முடியுமே தவிர பாராட்ட முடியாது . இங்கு DVD என்று ஒன்று இல்லாவிட்டால் பாதி இயக்குனர்கள் இல்லை. ஹாலிவுட் திரைப்படங்களின் தொழில் நுட்பம் இல்லாவிட்டாலும் மனதை தொடும் கதை அம்சம் உள்ள படங்களை இரு கை கூப்பி வரவேற்போம் .

கோடாங்கி.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக