பாடம் கற்று கொள்ள பார பட்சம் பார்பதில்லை நான் .
பகையாளி இடம் கூட.,,,,,,,,,
கடற்கறை இல் கஞ்சனாக இருந்த ஒருவனை
கடலை வாங்கி தின்ன செய்த சுண்டல் சிறுவனின்
தொழில் நுட்பம்.
மளிகை சாமனுக்கு மணிகணக்கில் பட்ஜெட் போடும்
மாதவன் மனைவிக்கு தினமும் மல்லிகை வாங்கி தரும்
மானசீகம்.
பென்ஸ் கார் பல்ராம் சேட் பெல் பாட்டம் போட்டு வந்த
சேல்ஸ் பையனிடம் காட்டிய கடுப்புத்தனம்
நடை பாதை வியாபாரி இடம் நாணம் இல்லாமல் நாணயம்
பொறுக்கும் ஏட்டு 302 வின் நயவஞ்சகம்
கணவனுடன் செல்லும் கர்ப்பிணி பெண்ணை கண்ணால்
கற்பழிக்கும் ஒரு கிழவனின் காம கொடுரம்
பாடல் கொண்டு பகைவனை பதற வைத்த பாரதியின் சிலை
பரமரிக்கபடாத அரசாங்க அலட்சியம் .
கோடங்கி.
பட்டணம் பார்க்க வந்தீகளா
பஞ்சாயத்து திண்ணைல படுத்து கிடந்தீக
பனங்கிழங்கு புடுங்கி அவிச்சி தின்னிக
பச்சை வயலுக்குள்ள பசின்னு பாக்காம
பாத்தி கட்டி நாத்து நட்டி வெச்சிக
நல்லாதானே இருந்தீக மக்கா
நாசமா ஏன் போனீக .
நான் சொல்லுதேன் .
நாட்சி முத்து வந்து நின்னான்
நல்லாதானே பொய்யும் சொன்னான்
மாரி பட்டணம் நீயம் வாடா
போடலாம் 420 பீடா
இங்க ஏன் இருக்க பட்டி காடா
பஸ் புடிச்சி பட்டணம் வா நீயும் ஸ்பீடா
இப்படி சொல்லிட்டு போய் புட்டான் சொககவாய் பயபுள்ள
மக்கா உனக்கு பறந்தது பட்டாம்பூச்சி மனசுக்குள்ள
பட்டணம் பார்க்க வந்தீக நீங்க பஸ்ல ஏறி வந்தீக
நெரிசல் கூட்டம் கண்டு மனசு நொந்து நின்னீக
பஸ் எறங்கி நின்னு பல மாடி கட்டடம் கண்டு
அண்ணாந்து பாக்கை இல
அடிச்சி புட்டான் உங்க பாக்கட்டுல
அழுது புலம்பி நின்னு
வீங்கி போச்சு கண்ணு
ஆத்தா செஞ்சி போட்ட அஞ்சு பவுனு செயின்
அகர்வால் சேட்டுகிட்ட அழுது அடமானம் வெச்சி
நீங்க ஆட்டோ புடிச்சி அமிஞ்சிகரை வந்தீக
மல்லு வேட்டி மடிச்சி கட்டி
மாமன் பொண்ண மயக்கி புட்டு
குழாய் பேண்டு போட்டு குரங்கு போல
குத்த வெட்சீக
கண்டாங்கி சேலை கட்டும் கருத்தம்மா
அங்க இருக்க
கலர் கவுனு போட்டு வந்த கனகாவ டாவு
அடிச்சிக .
அவுக காபி ஷாப் கூட்டி போனாக
கலர் கலரா ரீல் விட்டாக
கடுக்கன் போட்ட மக்க உங்க வட்ட
வாய் பொழக்க வெட்சாக.
வயல் ல உளைச்ச காச
வழிச்சி தொடைக்க வெட்சாக.
காசு காலியானதும் கை கொடுத்து
அனுப்பி வெட்சாக.
மக்கா கண்ணீர் தொடைக்க கைக்குட்டை
கைல இல்ல .
உங்க பாபநாசம் பஸ் புடிக்க பாக்கெட்ல
துட்டு இல்ல.
பட்டணத்து பாப்பவ பக்குவமா புடிக்க வந்து
பஸ் காசு இல்லாம பஸ்ஸ்டாண்ட்ல படுத்த நொந்து .
ஏல
அப்பன் காசு இருக்கு அசையாத வீடு இருக்கு
ஆடு அடிச்சு சோறு போடஆத்தாவும் அங்க இருக்கு
அப்போப்போ காசு தர அப்பத்தாவும் படுத்து கிடக்கு
மச்சானே கதியீனு கருத்தமாவும் காத்து கிடக்கு .
பட்டணம் போதும் ராசா சொந்த ஊர்ல கோட்ட கட்டு
பாபநாசம் பஸ் வருது உன் பழைய துணிய மூட்டை கட்டு
அப்போ கண்டிப்பா அங்க இருக்கு நாட்சி முத்துக்கு அருவா வெட்டு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
nalla irrukku
பதிலளிநீக்கு